திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் கடந்த சில தினங்களாக தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நிலக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரேவதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலகுண்டு நோக்கி மினி வேனில் சென்ற மினி வேனை மறித்து சோதனை செய்தனர். மினி வேனில் வந்த வத்தலக்குண்டு பள்ளிவாசல் சேர்ந்த அசன் முகமது இடமிருந்து பணம் ரூபாய் 86 ஆயிரத்து 445 ரூபாய் எந்தவிதமான ரசீதும் இல்லாமல் கையில் வைத்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உடனடியாக ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் ஒப்படைத்தனர். அப்போது உடன் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பையா, தேர்தல் துணை தாசில்தார் தங்கேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் பானுலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் பாபு சரவணகுமார் உட்பட பலர் இருந்தனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.