உசிலம்பட்டி- 80அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பூனையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தி.விலக்கு (திருமங்கலம்விலக்கு). இங்கு வசித்து வருபவர் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பிரகாசம்(65). விலங்கினங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் செல்லமாக பூனை ஒன்றை தன்னுடைய பிள்ளைகளை போல் வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த பூனை அருகே உள்ள 80அடி ஆழமுள்ள தண்ணீர் அதிகம் காணப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிகொண்டிருந்ததை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரார்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து சுமார்2மணி நேரமாக போராடி பூனையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட பூனையை உரிமையாளர் பிரகாசத்திடம் தீயணைப்புதுறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். ஆசை ஆசையாய் வளர்த்த பூனைக்குட்டி மீண்டும் கிடைத்துள்ளதால் பிரகாசம் மகிழ்ச்சி அடைந்தார். உசிலம்பட்டி பகுதிகளில் ஆடு, மாடு.நாய்,பூனை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் விரைந்து சென்று பத்திரமாக மீட்கும் தீயணைப்புதுறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!