பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலையின் போது மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் ஊராட்சிட்குட்பட்டது பிரவியம்;பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு அருகாமையில் உள்ள ஓடையில் நூறு வேலை பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் பிரவியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி ஓடையில் நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் கம்பியால் மண்ணை தோண்டினார். அப்போது அதில் சிலை இருப்பதை கண்டு அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சிலையை தோண்டி எடுத்து கொடிக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வாலாந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்டெடுக்கப்பட்ட வெண்கல சிலை மீனாட்சி அம்மன். சிலை மார்பளவு (பாதி அளவு ) உடைந்த நிலையிலும் உள்ளது. சிலையின் உயரம் 30 செ.மீ அகலம் 25.5 செ.மீ எடை 4.400 கிலோ என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து கண்டெடுக்கப்பட் மீனாட்சி அம்மன் சிலையை போலீசாரின் உதவியுடன் வருவாய்துறை அதிகாரிகள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!