முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா கர்நாடகா சிறையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு கட்சியையும் தாண்டி மனிதாபமான அடிப்படையில் பலர் ஆறுதல் தெரிவித்து ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 4 வருடங்களாக கர்நாடக சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் விடுதலையாகும் சமயத்தில் உடல்நிலை பாதிப்பு என செய்தி வந்த வண்ணம் உள்ளது.கட்சியையும் தாண்டி அண்டை மாநிலத்தில் ஒரு தமிழரின் உடல் நிலை திடீரென கேள்விக்குறி ஆகியுள்ளது.முழுமையான தகவல்கள் வரவில்லை.எனவே இவ்விஷயத்தில் தமிழகஅரசு சார்பில் முதல்வர் பழனிச்சாமி தலையிட்டு சசிகலா உடல்நிலை குறித்த உண்மைத்தகவல்களையும் சிறப்பான மருத்துவமனை சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.