நடிகர் ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கினால்தான் அவரைப் பற்றி கருத்து கூற முடியும் என உசிலம்பட்டியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவருமான மூக்கையாத்தேவரின் 40வது குருபூஜை விழா உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர்வiளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிpவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், இவரது நடிப்பை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இவர் முழுமையாக அரசியலுக்கு வந்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்தால் தான் அது பற்றி கருத்து சொல்லமுடியும் கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத்குமார் மற்றும் சட்டமன்றஉறுப்பினர்கள் நீதிபதி பெரியபுள்ளான் மாணிக்கம் ராஜன் செல்லப்பா உள்;பட பலர் கலந்தகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!