மதுரை மாவட்டத்தில் முன்னாள் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையாத் தேவர் அவர்களின் 40 வது ஆண்டு நினைவு தினத்தை 6.9.19 ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. மேற்படி நினைவு தினம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரியில் உள்ளநினைவிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், பல்வேறு அரசியல்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தேவர் அமைப்புகள் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும்
பொருட்டு மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணிவண்ணன் வேண்டுகோளின் படி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பிரிவு 144 குற்ற விசாரணை முறைச் சட்டப்படி சில நிபந்தனைகள் விதித்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இவ்வுத்தரவு 5.9.19 ம் தேதி மாலை 6 மணி முதல்7.9.19 ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். நினைவு அஞ்சலி செலுத்த வரும்நபிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை . அதே போல் அனைத்து திறந்த வகை வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் வர அனுமதியில்லை,மேலும் இரு சக்கர வாகனங்களில் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதியில்லை என்றும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.இருப்பினும் மற்ற பள்ளி கல்லூரி வாகனங்கள், பயணிகள் பேருந்து, சுற்றுலா வாகனங்கள்,சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் அவசர ஊர்திகள் ஆகியவை எப்போதும் போல வழக்கமாக செயல்பட அனுமதியளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் மேற்கண்ட ஆணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









