தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்களின் விருப்பத்தின் படி பள்ளிகள் சிறப்பு வகுப்புக்கள் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்(45).இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் வினிஷா(17). இவர் உசிலம்பட்டி தனியார்(ஆர்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி) பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்த வீடு திரும்பிய நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது துப்பட்டாவால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த உசிலம்பட்டி நகர் போலிசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து முதற்கட்டமாக விசாரனை நடத்திய போலீசார் மாணவிக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்யப்போவதாக மாணவியிடம் தெரிவித்ததாக கூறப்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்தது.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.