உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த200கிலோ கஞ்சாபறிமுதல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ஈச்சம்பட்டியில் உள்ள தங்கராஜ் மனைவி ரஞ்சிதம் (50) என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போது கம்பளி போர்வையில் சுற்றி 100பாக்கெட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 200கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ20லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிந்துபட்டி போலீசார் ரஞ்சிதத்தை கைது செய்து விசாரனை செய்ததில் இவரது மகன் ஜெயக்குமார் மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும், இன்று அதிகாலையில் ஜெயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் ஆட்டோவில் வந்து கம்பளி போர்வை வியாபாரம் செய்ய இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்துள்ளதாகவும் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவான ஜெயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!