உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதியில் புதிய முயற்சியாக போத்து நடவு முறையில் மரங்கள் நடப்பட்டன.

சிறிய மரக்கன்றுகள் நட்டு வைத்து வளருவதற்கு 5வருடத்திற்கு மேல் ஆகும். இதனை மாற்றும் முயற்சியில் மரத்தின் கிளைகளை வெட்டி மரங்கள் நடப்பட்டு வருகின்றனர். இதனை போத்து நடவு முறை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கண்மாய் உள்ளது. இந்நிலையில் புதிய முயற்சியாக 58கிராம இளைஞர்கள் குழு சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் போத் முறையில் அரசமரம், வேம்பு, ஆலமரம், உள்ளிட்ட மரங்களில் உள்ள அதன் கிளைகளை வெட்டி, அதன் கிளைகளில் ஈரவைக்கோல்களை சுற்றிவைத்து பின்பு 3மணி நேரத்திற்கு பின்பு கண்மாய் கரைப் பகுதியில் போத்து முறையில் மரங்கள் நடப்பட்டன. உசிலம்பட்டியில் முதன் முறையாக போத் நடவு முறையில் மரங்கள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!