மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாட்டி கிராமத்தில் அருள்மிகு பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த
கோவிலில் கார்த்திகை மாத சிவராத்திரையை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காளியம்மன் கோவிலில் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடந்து கிராமம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராமத்தில் உள்ள பெண்கள் முளைப்பாரி எடுத்து தலையில் சுமந்துபடியே ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்து வழிபாடு நடத்தினர்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.