உசிலம்பட்டியில் தனியார் உணவகத்தில் பிரபல ரவுடி வெட்டிகொலை போலீசார் விசாரனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின்ரோட்டில் உள்ள தனியார் (கல்யாணி ஓட்டல் ) உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வருபவர் முத்துமணி (25) . இவர் வழக்கம் போல் உணவகத்தில் வேலைபார்த்துகொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து மு;ததுமணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். கண்இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் உணவகத்தில் சாப்பிட்டுகொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு நேரில் சென்ற உசிலம்பட்டி காவல்துறை துணைகண்காணிப்பாளர் ராஜா, மற்றும் போலீசார் முத்துமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் முத்துமணி மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதும் இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளதாகவும் முன்விரோதத்தால் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!