உசிலம்பட்டி அருகே கடந்த ஆறு மாதங்களாக எம்எல்ஏவுக்காக காத்திருந்த பயணியர் நிழற்குடை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் பஞ்சாயத்தைச் சோ்ந்த கொப்பிலிப்பட்டி கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4இலட்சம் மதீப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் இதற்காண பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிறைவுபெற்ற நிலையில் எம்எல்ஏ திறந்து வைப்பதற்காக காத்திருந்தது. ஆனால் எம்எல்ஏவின் தேதி கிடைக்காததால் கடந்த ஆறு மாதங்களாக திறப்பு விழா நடைபெறவில்லை.இதனால் பயணியர் நிழற்குடை கட்டிடத்தை பொதுமக்களை பயன்படுத்த விடாமல் நிழற்குடை கட்டிடத்தில் முட்களை வைத்து தடைஏற்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஒருவழியாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தேதி கிடைத்தவுடன் ஆறு மாதங்களுக்குப்பின் பெயிண்ட் வண்ணமெல்லாம் மங்கிய பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புக்களும் வழங்கி நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இலட்சகக்கணக்கில் செலவழித்து அரசு நிதியின் மூலம் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை அவை பாழாகும் முன் இது போன்று அரசியல்வாதிகளை எதிர்பாராமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!