மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராமத்தில் உள்ளது பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை. இந்த நிழற்குடை உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4லட்சம் மதீப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் தனிநபர் சிலர் மாட்டுதீவனங்களை அங்கு கொட்டப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.