மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வளாகத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையாத்தேவருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொந்த செலவில் வெண்கல சிலை நிறுவுகிறார். இந்நிலையில் பணிகள் தொடங்குவதற்காக நகராட்சி பணியாளர்கள் தேவர் சிலை வளாகத்தில் இருந்த உசிலை மரம் உள்பட 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டினர். தினமும் மரக்கிளையில் வசித்து வந்த சிட்டுகுருவிகள் அனைத்தும் மரங்கள் இல்லாததால் அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்தது. தேவர் சிலை வளாகத்தில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் நகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.அதற்கு உசிம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதில் அனுப்பிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.அதில் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது உசிலம்பட்டி அதிமுக நகரச் செயலாளர் பூமா ராஜா கேட்டுக் கொண்டதின் பேரில் வெட்டப்பட்டதாகவும் மேலும் அப்பகுதியிலுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் தேவர்சிலை வளாகத்தில் தவறான செயலில் ஈடுபடுவதாகவும் குப்பைகளை கொட்டுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மரங்களை வெட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.24 மணி நேரமும் ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டது இதுநாள் வரை நகராட்சி அதிகாரிகளுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா.மரங்களை வெட்டுவதற்கு இதுபோன்ற காரணங்கள் அவசியம்தானா என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதிகாரிகளின் இந்தப்பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது. அரியவகை மரமான உசிலை மரம் உள்பட பல மரங்களை வெட்டி சிலை வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.