தமிழகத்திலேயே முதன் முறையாக உசிலம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் செயல்திறன் கணிணி பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளியானது நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயி;ன்று வரும் நிலையில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா ஊராடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் மூலம் செயல்திறன் கணிணி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணிணி ஆசிரியர்கள் ஐசிடி எனும் இணையவலைதளம் மூலம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் செயல்திறன் கணிணி பயிற்சி வழங்குகிறார்கள். இந்த பயிற்சியில் ஆன்லைன் வகுப்பு, புதிய தொழில்நுட்பத்தை கையாளுதல், மாணவர்களுக்கு கணிணியை எளிதில் புரிவது உள்ளிட்டவைகளை விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி வரும் பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்திலேயே முதன் முறையாக ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கணிணி செயல்திறன் பயிற்சி வழங்கப்பட்டது இந்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது

.உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!