உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கணேசன். இவர் கடந்த 16.10. 2020 ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பதாதது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை வீடு திரும்பாததால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் மாயமானது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!