உசிலம்பட்டி அருகே 14வயது சிறுவன் தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை புரிந்து வருகின்றான்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் தனோஜ் (14).இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு செல்லவுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளி செல்ல முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சும்மா இருக்கும் சமயத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என எண்ணிய இந்த சிறுவன் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் ஏறி பயிற்சி செய்து வந்துள்ளான். தென்னை மரம் ஏற யாரும் கற்றுத்தராத நிலையில் தானாகவே தொடர்ந்து முயற்ச்சி செய்துள்ளான்.

மரம் ஏற கற்றுக் கொண்ட நிலையில் தலைகீழாக தென்னை மரம் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளான். அதனையும் கற்றுக்கொண்டு தற்போது முற்றிலும் தென்னைமரங்களில் தலைகீழாக ஏற கற்றுகொண்டுள்ளான். அவரது தோட்டத்தில் உள்ள 15அடிநீளமுள்ள தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை புரிந்துள்ளான்.தற்போது பக்கத்து தோட்டத்திலுள்ள தென்னை மரங்களில் ஏற பழகி வருகின்றான்.சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை இந்த சிறுவன் தனோஜ் நிருபித்துக் காட்டியுள்ளான்.இவனை இக்கிராம பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!