உசிலம்பட்டி – கண்மாயை இரவிலும் தூர்வாரும் இளைஞர்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்தர பாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடங்கினர்.

அதனைதொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழைக்காலம் என்பதால் பணிகளை விரைந்து முடிப்பதற்காக தீவிரமாக இளைஞர்கள் பணியாற்றி வவருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடர்ந்து கண்மாய் தூர்வாரும் பணிகளை செய்து வருகின்றனர்.தன்னலமிக்காமல் பொதுநலத்துடன் மிகுந்த அக்கறை கொண்டு இரவிலும் கண்மாய் தூர்வாரும் பணிகளை செய்து வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!