மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையால்
பேரையூர் ரோட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவமணை அருகில் உள்ள நர்சரி தோட்டத்தில் மரக்கன்றுகள் வியாபாரம் செய்து வருகிறார் அந்தபகுதியைச் சேர்ந்த செல்லம்மாள்(46). இவர் கடந்த 2வருடங்களாக நர்சரி தோட்டம் வைத்து மரக்கன்றுகள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5மாதங்களாக கொரோனா ஊரடங்கால் மரக்கன்றுகள் வியாபாரம் மந்தமாக இருந்துள்ளது. இதனால் மரக்கன்றுகள் விற்பனை நடைபெறாமல் தேங்கியிருந்தது. இந்நிலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருவதால் கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்..இதனால் மரக்கன்றுகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் வேம்பு, புளிமரம், தென்னைமரம், ஆப்பிள்,பூச்செடிகள், அலங்கார செடிகள் போன்றவைகளை ரூ.30 முதல் மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால் மரக்கன்றுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளதால் மரக்கன்றுகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் போதிய வருமானமின்றி வேலையிழந்துள்ள செல்லமாள்க்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


You must be logged in to post a comment.