உசிலம்பட்டியில் பழமையான பட்டுபோன புளியமரம் அகற்றப்பட்டு அதே இடத்தில் நடிகர் சௌந்தரராஜன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்ததாக கூறப்படுகிறது. அந்த மரம் காலப்போக்கில் பட்டுப்போன மரமாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் இந்த பட்டுப்போன மரம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டுபோன மரத்தை அதிகாரிகள் அகற்றினர்.இந்நிலையில் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட தமிழ் திரைப்பங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த நடிகர் சௌந்தர்ராஜன் புளியமரம் அகற்றப்பட்ட அதே இடத்தில் வேம்பு,ஆலமரம், அரசமரம் ஆகிய மூன்று மரக்கன்றுகளை கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலையில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார்.இதில் தன்னார்வ இளைஞர் குழு பிரேம்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்திரன், ஜெயசந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!