நடிகர் சௌந்தர் ராஜா – வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது

சசிக்குமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடைக்குட்டி சிங்கம், சிலுக்குவார்பட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக உள்ள நடிகர் சௌந்தர் ராஜா, இயற்கையின் மீது கொண்ட காதலால் மண்ணையும் மக்களையும் இணைத்து இயற்கை வளங்களை பெருக்க எடுத்துள்ள முயற்சி தான் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை.இந்த அறக்கட்டளை துவங்கிய நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, இயற்கை சார்ந்த சமூக பணிகள் மற்றும் சத்தமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமாக 25000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.இதன் ஒருபகுதியாக அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அவரது சகோதரர் தியாகராஜன் தலைமையில் குப்பணம்பட்டி, நடுப்பட்டி, கருப்புக்கோவில், கீழப்பள்ளிவாசல், உத்தப்பநாயக்கணூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஒன்றினைந்து நூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!