மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராம பகுதிகளில் சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் டிஎன்டீ மக்களின் விடுதலை நாளில் அனைத்து கிராமத்திலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டிஎன்டி மக்களின் நீண்ட வருட கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தீர்மாணங்கள் மக்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசே டிஎன்டி மக்களின் மீதுள்ள ஹச்ஓஏ பழக்க வழக்க குற்றவாளி என்ற கருப்பு சட்டத்தை உடனே நீக்கிடு, மத்திய அரசே ஈஸ்வரஐயா காமிஷான்2015 ன் பரிந்துரையின்படி ஓபிசி இடஒதுக்கீடு 27/ல் டிஎன்டி மக்களுக்கு 9/ உள் இடஒதுக்கீடு போன்றவைகளை உடனே செயல்படுத்து தமிழகஅரசே தமிழகத்தில் குழப்பமில்லாமல் முழுமையாக டிஎன்டி வழங்கீடு தமிழகத்தில் நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய் என பல்வேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டன. இதில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர்.பிவி கதிரவன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களின் ஆணைகிணங்க மதுரை மேற்கு
மாவட்டசெயலாளர் தேசிய ஆலோசனைகுழு உறுப்பினர் சீர்மரபினர்நலச் சங்க மாநிலசெயலாளர் பொன் ஆதிசேடன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் ஒன்றிய செயலாளர் குபேந்திரன், விவசாயஅணிசெயலாளர் அம்மாவாசி, மாவட்ட மாணவரணி செயலாளர்கள் விக்னேஷ், முத்துகாமன், மனோஜ் ஜெகதீசன், சிவாத்தேவர்,அஜித் சுபாஸ்,தர்மலிங்கம், தினேஷ் , முத்துராமன் மணிமாறன், யுவராஜா, சேகர், பரத், மகளிரணி மாவட்டசெயலாளர் கூட்டுறவுவங்கி இயக்குனர் ஜெயப்பிரியா, மாவட்டதலைவி லட்சுமி, மலர்கொடி, சரஸ்வதி, தாரணியா, பெருமாயி, ஜெகதாமுத்துராமன், கல்பனா மற்றும் பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









