பாறைப்பட்டியில் உசிலை பசுமைக்கரங்கள் சாா்பாக மரம் நடும்வவிழா

தமிழகம் முழுவதும் தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தன்னார்வலர்கள் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் மரம் நடும் விழாவில் பங்கேற்கின்றனர் மேலும் மழை காலங்களில் மரங்கள் நட்டால் வேகமாக வரும் என்பதால் அனைவரும் மரம் நடும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மா. பாறைப்பட்டி கிராமம் சடையனூற்று ஈஸ்வரன் கோயில் மலையை சுற்றி சுமார் 30 க்கும் மேற்பட்ட பெரிய மரக்கன்றுகளை  உசிலம்பட்டிவருவாய் கோட்டாட்சியர்_ராஜ்குமார் தலைமையில் நடப்பட்டது.

மா.இராஜாக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ், அவரது கணவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் . அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்து பராமரிப்பு செய்ய உறுதி எடுத்துக் கொண்டார்கள்.நிகழ்ச்சியில் 58 கிராம வட்டார இளைஞா் சங்கத்தின்  சாா்பில் சௌந்திரபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!