மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் கிராமப்பகுதிகளில் ஆடி மாதத்தை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.; ஆடி முதல் நடுஆடி மற்றும் கடைசி ஆடி நாளில் அனைவர் வீட்டிலும் சமையலில் அசைவம் இடம் பெற்றிருக்கும்.அந்த வகையில் நடுஆடியான இன்று உசிலம்பட்டி அருகிலுள்ள தி.விலக்கு வாலாந்தூர் அன்னம்பாரிபட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் இறைச்சிக் கடைகளில் இறைச்சி குவிந்தனர்.அதிகாலை முதலே இறைச்சி விற்பனை களைகட்டியது.
ஆனால் கடைக்காரர்களோ இறைச்சி வாங்க வந்தவர்களோ சமூக இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் கடைகளில் குவிந்ததால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பப்பட்டுள்ளது.மேலும் கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படவில்லை.திறந்த வெளியில் இறைச்சிகள் இருந்ததால் ஈக்கள் மொய்த்து காணப்பட்டன.கிராமப்பகுதி என்பதால் போலிசாரோ அரசு அதிகாரிகளோ கண்காணிப்பில் ஈடுபடவில்லை.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.