மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியையச் சோ்ந்தவா் கண்ணன் மகன் முருகன். விவசாயி. இவர் தோட்டத்தின் அருகாமையில் கிணறு உள்ளது. அதன் அருகில் மேய்ச்சலுக்காக தனது 5மாத கருவுற்றிருந்த பசுமாடு மேய்ச்சலுக்கு விட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் பசுமாடு விழுந்துவிட்டது .இதை அறிந்து பொதுமக்கள் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நிலைய அலுவலர் தங்கம் மற்றும் முன்னணி தீயணைப்பு வீர மணிகண்டன் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். மேலும் இதற்கு உறுதுணையாக தேனியில் காவல்துறையை பணி முடிந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிய விருமாண்டி மற்றும் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்புடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.