மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் மலையாண்டித்தியேட்டர் தெருவில் வாடகை வசிப்பவர் செல்வம் (48).பழக்கடை வைத்துள்ளார்.இவர் காலையில் தனது மனைவியுடன் கடைக்கச் சென்று விட இவருடைய சந்துரு (19) தனது நண்பர்களுடன் வீட்டினுள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது வீட்டினுள் இருந்த பழ அட்டைப்பெட்டியில் திடீரென தீப்பிடித்துள்ளது.
சந்துருவும் அவரது நண்பர்களும் தீயை அணைக்க முயல்வதற்குள் மேலும் தீப்பிடித்து வீடு முழுவதும் தீ பரவியது.உடனடியாக சந்துருவும் அவரது நண்பர்களும் ஜன்னலை உடைத்து வெளியே வந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத் துறைறயினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.ஆனால் அதற்குள் வீட்டிலிருந்த டிவி பேன் மிக்சி கட்டில் உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாயின.தகவலறிந்து சம்பவவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜா விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்..இது குறித்து உசிலமம்பட்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.