மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளது ஆனந்தா நகர் 3வது தெரு.இத்தெருவிலுள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் கம்பெனி சார்பில் செல்டவர் அமைக்க ஏற்ப்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குடியிறுப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதால் கேன்சர் போன்ற வியாதிகள் வரும்
.கதிர் வீச்சால் கர்ப்பிணிப்பெண்கள் சிறுவர்கள் பாதிக்கப்படுவர் என அப்பகுதி பெண்கள் கூறி சுமார் 50க்கும் தெருவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகலறிந்த அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்;.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.