உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இம்மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆவின்பால் மருந்துக்கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை.ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் மருந்துக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும.; திறக்கப்படவில்லை.
இதனால் ரோட்டோர பிச்சைக்காரர்கள் சாலையோர அனாதைகள் சாப்பாடு இன்றி பெரிதும் சிரமப்பட்டனர்.அதில் ஒரு பிச்சைக்காரர் காலையிலிருந்து சாப்பிட ஒன்றுமே கிடைக்காத நிலையில் சாலையோரத்திலுள்ள ஒவ்வொரு குப்பபையிலும் உணவருந்த ஏதும் கிடைக்காதா என்று குப்பைகளை கிளறி உணவு சேகரித்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.இவருக்கு மதியம் வரை யாரும் உணவு தர முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.