தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினை கட்டுபடுத்த சுகாதார துறை மூலம் நடமாடும் மருத்துவகுழுவினர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி பஞ்சாயத்திற்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி கிராமத்தில் தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார துறை மூலம் நடமாடும் மருத்துவ குழு மூலம் காய்ச்சல் தடுப்பு பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவர் சுந்தர மகாலிங்கம் கிராம மக்களிடம் காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பஞ்சாயத்திற்குட்பட்ட வகுரணி, சந்தைப்பட்டி, அயோத்திபட்டி, கணவாய்ப்பட்டி, குறுக்கம்பட்டி போன்ற பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் வகுரணி ஊராட்சி மன்ற தலைவர் லோகரானி மார்க்கண்டன், ஊராட்சி செயலாளர் தனம் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.