மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுக்கோட்டை பெருமாள்கோவில்பட்டி உத்தப்பநாயக்கனூர் ஆகிய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சிவப்பு சோளம் பயிரிட்டுள்ளனர்.நன்கு விளைச்சலைக்கண்டுள்ள சிவப்பு சோளம் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மானாவாரி பயிர்கள் பயிரிடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் இதற்கு முன்னதாக சிவப்பு சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை நேரத்தில் மழை வந்ததால் அறுவடை செய்ய முடியாமல் சிவப்பு சோளம் செடியிலே முளைத்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்லாயிரம் ரூபாய் செலவிட்டு பயிரிட்ட சிவப்பு சோளம் மழையில் நனைந்து வீணாகுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிவப்பு சோளம் நல்ல விலை போன பொழுதிலும் (குவிண்டால்-ரூ8ஆயிரம்) விளைச்சல் இருந்தும் மழையினால் அறுவடை செய்ய முடியாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.