மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பாக மாமரத்துப்பட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் தமிழக அரசு சார்பாக காய்ச்சல் தடுப்பு கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமார் . வட்டாட்சியர் செந்தாமரை கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார். மேலும் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் விழிப்புணர்வு, நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணபிரபு. தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுசிலா. மருத்துவர் தினேஷ். மற்றும் சுகாதார பணியாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் வினய் எடுத்துக்கூறினார். மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு ஆலோசனைகள் கூறினார். பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.இதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசு சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுக்குள் உள்ளது எனக் கூறினார்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.