மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பாறைப்பட்டி கல்லூத்து பெருமான்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூவை 100க்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்துள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் புற்கள் முளைத்து களை எடுப்பதற்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் தமிழக அரசு பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி உள்ளது. இதனால் கூலி வேலை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.
இச்சமயத்தில் தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக மானியத்துடன் கூடிய களை எடுக்கும் இயந்திரம் மற்றும் நடவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைக் கிராமத்திற்கு ஒரு விவசாயி மானிய விலையில் விலைக்கு வாங்கி கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த வாடகைக்குத் தருகிறார்.இதனைக்கொண்டு குறைவான நேரத்தில் மினி டிராக்டர் மூலம் மல்லிகைப்பூ விவசாயிகள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமாக ஆட்களை விட்டு களையெடுத்தால் ஏக்கருக்கு ரூ5ஆயிரம் வரை செலவாகும். ஆனால் அரசு வேளாண்மை துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட மானியத்துடன் கூடிய டிராக்டர் மூலம் களை எடுக்கும்பொழுது வாடகை டீசல் செலவு உள்பட ரூ500 மட்டுமே விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கொரோனா ஊரடங்கில் ஆட்களை எதிர்பார்க்காமல் மல்லிகைப்பூ விவசாயம் செய்வதாகவும் இயந்திரத்தை மானியத்துடன் வழங்கிய தமிழக அரசுக்கும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள நன்றி தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.