கோணயம்பட்டியில் குடும்ப தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை. ஆர்டிஓ விசாரணை.

மதுரை மாவட்டம் விருவீடு அருகே கோணயம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சென்றாயன். (30).இவர் அந்த பகுதிகளில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (20). இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சம்பவதன்று பால் வியாபாரம் செய்து விட்டு வந்த சென்ராயன் வீட்டில் மனைவி வீரலட்சுமியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரலட்சுமி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் வீரலட்சுமியை மீட்டு விருவீடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .திருமணம் முடிந்து இரண்டு வருடங்களள் ஆனதால் இது குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார். விசாரணை நடத்தி வருகிறார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!