மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சினேகா(18). இவர் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார் சினேகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது..இந்நிலையில் சினேகா துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் சுடிதார் சாலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் உத்தப்பநாயக்கணூர் போலீசாhருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இவர் உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து என்பது குறித்து உத்தப்பநாயக்கணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.