உசிலம்பட்டி அருகே அருள்வாக்கு சொல்லும் சாமியாரிடம் ரூ2 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோடநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மகன் தங்கப்பாண்டி சித்தர்(25).இளம் வயதிலேயே கருப்புச்சாமி இறங்கியதால் தனது தோட்டத்திலேயே குடில் அமைத்து (குறி)அருள்வாக்கு சொல்லி வருகிறார்.சாமி இறங்கி வாக்கு சொல்வதாலும் பெரும்பாலானவை பலிப்பதாலும் இதற்காக குறைந்த கட்டணமே வசூலிப்பதாலும் (ரூ.10-ரூ.100வரை) செவ்வாய் வெள்ளிக்கிழமையில் இவருடைய தோட்டத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.நாளடைவில் உள்ளுர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து இருந்து பக்தர்கள் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் தங்கப்பாண்டி முகக்கவசம் அணிந்து அருள் வாக்கு கூறி வருகிறார்.பொது மக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து அருள்வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி  அருள்வாக்கு கேட்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.செவ்வாய்க்கிழமை வந்த அவருக்கு அருள் வராததால் வெள்ளிக்கிழமை வரச் சொல்லியுள்ளார்.அன்றும் அருள் இறங்காததால் தன்னால் குறி சொல்ல இயலாது எனக் கூறியுள்ளார்.கூட்டத்திற்கு மத்தியில் இருமுறை வரச்சொல்லி தனக்கு குறி சொல்லாததை மானப்பிரச்சனையாக எடுத்துக் கொண்ட முத்துப்பாண்டி அவமானத்தில் தங்கப்பாண்டி சித்தரை கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளார்.சாமி வரம் கொடுக்காவிட்டால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என தங்கப்பாண்டி கூற உனது பெயரைக் கெடுக்காமல் விட மாட்டேன் என கோபமாக கூறியபடியே அங்கிருந்து சென்றுள்ளார் முத்துப்பாண்டி.

பண்ணைப்பட்டி கிராமத்திலுள்ள திமுக பிரமுகரான பாலகருப்பு என்பவரிடம் இவ்விஷயத்தைக் கூற அவரின் ஆலோசனைப்படி பாலகருப்பு முத்துப்பாண்டி மற்றும் அவரின் உறவினர்கள் சிலருடன் கடந்த 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் தங்கப்பாண்டி குறி பார்க்க வருபவர்களிடம் பணம் பறித்து ஏமாற்றுவதாகவும் பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதாகவும் இது குறித்;;து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அதனால் தங்கப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்துள்ளார்.

பின் தங்கப்பாண்டி சித்தரிடம் சென்ற பாலகருப்பு முத்துப்பாண்டி ஆகியோர் உன் பெயரை ஓரே நாளில் டேமேஜ் ஆக்கிவிட்டோம். ரூ2 லட்சம் கொடுத்தால் கலெக்டரிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விடுவதாகக் கூறியுள்ளனர்.இதற்கு தங்கப்பாண்டி ஒத்துக் கொள்ளாததால்  பணம் கொடுக்காவிட்டால் உன்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.பயந்து போன தங்கப்பாண்டி எழுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.வழக்கை விசாரித்த சார்பு ஆய்வாளர் சின்னச்சாமி தலைமையிலான போலிசார் பாலகருப்பு முத்துப்பாண்டி ஆகியோர் மீது  கொலை மிரட்டல் விடுத்தல் பொது இடத்தில் தகாதவார்த்தைகளால் திட்டு மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!