மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினரிடம் அடையாளம் தெரியாத சிலர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலுக்கு நிர்வாகத்தினர் அடிபணியாத நிலையில் தற்போது சிலர் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்
அதில் உள்ள நிர்வாகிகளின் மேல் பல அவதூறான தகவல்களை அச்சகத்தின் பெயர் கூட குறிப்பிடாமல் போஸ்டா் அச்சிட்டு, உசிலம்பட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளி நிர்வாகத்தை மிரட்டும் நோக்கத்தோடு ஒட்டியுள்ளனர். இது சம்பந்தமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதின் பெயரில் வழக்கு (குற்ற எண் 1198/2020) பதிவு செய்யப்பட்டு போஸ்டா் ஒட்டியவா்களை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இந்த குற்ற சம்பவத்திற்கு பின்னால் இன்னும் பல சமூக விரோதிகள் இருக்கக்கூடும் என பள்ளி நிர்வாகத்தினர் சந்தேகிக்கின்றனர்.


You must be logged in to post a comment.