அம்பான் புயல் தாக்கத்தால் கடந்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் ஒருசில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராமப் பகுதிகளில் அம்பான் புயல் தாக்கத்தின் எதிரொலியாக இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதுடன் அனல்காற்று வீசிவருகிறது. அனல் காற்று வீசுவதால் சாலைகளில் கடும் வெயில அடிக்கின்றது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதுடன், வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் 50 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட பொழுதிலும் கடும் வெயில் காரணமாகவும் மீண்டும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.உசிலம்பட்டிப் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


You must be logged in to post a comment.