தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் குறைந்துள்ள பகுதிகளில் தமிழக அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் இறைச்சிகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் உசிலம்பட்டியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சமூக இடைவெளி, முககவசம், அணிவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பொது மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி கடைகளில் விற்பனை செய்யலாம் என அரசு அனுமதி வழங்கியது. இதனால் தற்போது இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இறைச்சி கடைகள்; திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது கோழிக்கறி கிலோ ரூ250 வரை விற்பனை செய்யப்படுகிறது.ஏற்கனவே ஆட்டிறைச்சி ரூ 1000 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களின் கவனம் கோழிக்கறி பக்கம் திரும்பியது.தற்போது இதன் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதாலும் இறைச்சிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.இதனால் கோழிக் கடைகளில் கறி வாங்க ஆளில்லாமல் வியாபாரம் மந்தமாக உள்ளது.பிராய்லர் கடைகளில் தினமும் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை நடை பெற்று வந்த நிலையில் தற்போது ரூ.2000; கூட விற்பனை நடைபெறவில்லை என பிராய்லர் கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


You must be logged in to post a comment.