தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஒருசில மாவட்டங்களில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடைகளை வழக்கம் போல் திறக்க அனுமதித்தாலும் பொது வெளியில் வருபவர்கள் முகக்கவசம் அணிய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து முகக்கவசம் அணியாமல் நகரப் பகுதிகளில் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூ100 உடனடி அபராதம் விதித்தனர்.உசிலம்பட்டி முக்கியச் சாலைகளான மதுரை ரோடு தேனி ரோடு போன்ற சாலைகளில் முகக்கவசம் அணியாமல் நடந்து செல்வோர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஆகியோரை நிறுத்தி நகராட்சி அதிகாரிகள் சுகாதாரத்துறை ஆய்வாளர் அகமது கபீர்; தலைமையிலும் காவல்துறையினரும் இணைந்து உடனடி அபராதம் ரூ 100 விதித்து இரசீது வழங்கினர்.மேலும் இரசீதுடன் முகக்கவசமும் வழங்கினர்..இனிவரும் நாட்களிலும் அபராதம் விதிக்கப்படுவது கடுமையாக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









