உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக (கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட) பாதுகாக்கப்பட்ட பகுதியான மானூத்து கிராமத்தில் இரண்டாவது நாளாக 3,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் இன்று மானூத்து கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்திற்கு வீதம்5 கிலோ அரிசியும், 7 கிலோ காய்கறியும் நிவாரணப்பொருட்களாக வழங்கப்பட்டது.இதுவரை கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதியில் 18,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கள்ளர் நாடு அறக்கட்டளையுடன் மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாசாயிகள் சங்கத்தின் சாா்பில் சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞா்கள் பங்கேற்றனா்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.