உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக மதுரை
மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்கள் சுமார் 500 பேருக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.பின்னர் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களுடன் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கினார்.பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 300 பேருக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் பூமா ராஜா நடுப்பட்டி பால்பண்ணைத்தலைவர் பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.