மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்யைச் சேர்ந்தவர்கள் கணேசன் மகன் பிரசாந்த் (26) கனிமுருகன் மகன் அரவிந்த்(28).உள்ளுரில் ஒரு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கும் கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன்
புவனேஷ்வரன் (25) என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்ப்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் அன்னம்பாரிபட்டி இரயில்வே நிலையம் அருகே அமர்ந்து கொண்டிருந்த பிரசாந்த் அரவிந்த ஆகிய இருவரையும் சில மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்ச்சித்துள்ளனர்.இவர்கள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தவுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் புவனேஷ்வரன் தூண்டுதலின் பேரில் சில மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.மேலும் தலைமறைவான புவனேஷ்வரனை போலிசார் தேடி வருகின்றனர்.


You must be logged in to post a comment.