மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள
தொட்டப்பநாயக்கனூர் அம்பா சமுத்திரம் கிராமத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அக்கிராமம் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கிராமத்தில் 130 குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் நிவாரணப் பொருட்கள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி வழங்கினார். இதில் நகரச் செயலாளர் பூமாராஜா மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் .தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா வட்டாச்சியர் செந்தாமரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் கிராம மக்கள் சமூக இடைவெளி விட்டு நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.