தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஊரடங்கினால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து அம்மா உணவகத்திலும் மூன்று வேளையும் இலவசமக உணவு வழங்க ஏற்ப்பாடு செய்யப்பட்டது.இதற்கான செலவை அப்பகுதியிலுள்ள அதிமுகவினரே ஏற்றுக் கொண்டனர்.இந்நிலையில் தமிழகத்தில்
ஊரடங்கை மே17 வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.இதில் தமிழகத்தில் சில பகுதிகள் ஊரடங்கில் தளர்விலிருப்பதாக கூறப்பட்டாலும் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இல்லை.சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ள மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி ஊரடங்கு தளர்வு செய்யப்படவில்லை.இதனால் கடைகள் எதுவும் இயங்காத நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழலில் உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை மீண்டும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் தினமும் 500க்கும் மேற்ப்பட்டோர் உணவருந்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You must be logged in to post a comment.