தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்த கொரோனா வைரஸ்சை தடுக்கும் பணியில் பெரும்பங்காக மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் இரவும் பகலும் பார்க்காமல் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர்,
இவர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணிஅரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் பனி புரியும் பட்டதாரி ஆசிரியர் இரா.சுருளிவேல், ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் மாது ராஜி, அதிமுக கிளைச் செயலாளர் ராஜி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு சுமார் 50 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி,பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது, தூய்மைப் பணியாளர்களின் ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் சார்பில் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் 200 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது,இளம் வயதில் இன்னொருவரின் கஷ்டங்களைப் புரிந்து உதவும் அரசு பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் இரா.சுருளிவேலை தூய்மைப் பணியாளர்கள் வாழ்த்திச் சென்றனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.