உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் YOUNG GUYS CRICKET CLUB என்ற தனியாா் அமைப்பின் சாா்பில் சரவணப்பாண்டி தலைமையில் இளைஞா்கள் உசிலம்பட்டி வருவாய் கோட்டாசியர் ராஜ்குமாா் மற்றும் காவல் ஆய்வாளர் சாா்லஸ் ஆகியோாிடம் துப்புரவு பணியாளர்கள், பொது சேவகர்கள், மற்றும் பொதுமக்கள் உபயோகத்திற்கு முககவசங்களை வழங்கினா்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.