உசிலம்பட்டி காய்கறி ஏலச்சந்தை சனிக்கிழமை வரை இயங்காது. விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் கமிஷன் கடை சங்கத்தினர் அதிரடி முடிவு.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் அருகே காய்கறி ஏலச்சந்தை செயல்பட்டு வருகிறது.இங்குதான் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை ஏலம் வாங்கி தினசரி காய்கறி சந்தைக்கு அனுப்புவர்.இந்நிலையில் இங்கு வரும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.இது குறித்து பலமுறை வியாபாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்த போதும் அவர்கள் கூட்டமாக வருவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர்.போலிசாராலும் அதிகாரிகளாலும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.ஏற்கனவே உசிலம்பட்டி எஸ்ஒஆர் நகர் பகுதியில் டில்லி சென்று திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் காய்கறி கமிஷன் கடைச் சங்கத்தினர் வரும் சனிக்கிழமை வரை ஏலச்சந்தை நடைபெறாது எனத் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் சமூக இடைவெயியைப் பின்பற்றாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இதன்பின்னும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு முடியும் வரை காய்கறி ஏலச்சந்தை செயல்படாது என காய்கறி கமிஷன் கடை சங்கத்தினர் தெரிவித்தனர்.கமிஷன் கடை சங்கத்தினரின் அதிரடி முடிவால் உசிலம்பட்டி தினசரி காய்கறி சந்தைக்கு காய்களிகள் வருவதில் சிக்கல் ஏற்ப் பட்டுள்ளது.

உசி லை  சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!