உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் ஊரடங்கால் வேலையயிழந்த நரிக்குறவ மக்களுக்கு அரசு சார்பில் அரிசி உள்ளிட்ட வீட்டுச்சாமான்களை வட்டாட்சியர் வழங்கினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சமுத்துவபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொரோனா தாக்கத்தினால் ஊரடங்குகு உத்தரவு பிறப்பபிக்கபப்பட்டதால் வேலையயிழந்த நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரனமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் ஆகியோர்கள் வழங்கினார்கள். கொரோனா நிவாரணப்பொருட்களை நரிக்குறவ மக்களும் முககவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவராக வரிசையாக வந்து பொருட்களை பெற்றுச்சென்றனர். நரிக்குறவ மக்களுக்கு ரேசன் கார்டு மூலம் ஏற்கனவே தமிழக அரசு உத்தரவின் படி ரேசன் கடையின் மூலம் ரூ1000 உதவித்தொகை மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!