மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் அரசுகள்ளர் தொடக்கப்பள்ளி பொட்டுலுப்பட்டியில் பள்ளி ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவச்செல்வங்களின் ஆனந்த கொண்டாட்டத்தில் விழாவினை சரக மேற்ப்பார்வையாளர் பல்பநாபசேகர் தலைமை வகித்தும் செல்லம்பட்டி வட்டார கல்வி அலுவலர் திலகவதி முன்னிலை வகித்தும் பள்ளி ஆண்டுவிழாவினை பெருமைபடுத்தினார்கள், பள்ளி மாணவச்செல்வங்களின் எல்லையற்ற ஆசைகளை நிறைவேற்றும் வண்ணம் அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியர் மாலாமேரி மகிழ்வுடன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பொட்டுலுப்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் ஜெயாசெல்வம் , செல்லம்பட்டி வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுநர் சங்கீதா கனவாய்ப்பட்டி தலைமை ஆசிரியர் தமிழரசி , கள்ளபட்டி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி பூச்சிபட்டி மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் .காசிமாயன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பு செய்தார்கள்,மேலும் முன்னாள் மாணவர்கள் காசிசெல்வம், பரிசு பொருட்களும் கிருஷ்ணமூர்த்தி கார்டுலெஸ் மைக்கும் மற்றும் பல முன்னாள் மாணவர்கள் விழா மேடை அலங்காரமும் செய்து கொடுத்து ஊக்கமளித்தார்கள். விழாவில் மாணவச்செல்வங்கள் ஆடல்,பாடல்,கவிதை,நாடகம்,பேச்சு போன்ற பல்திறமைகளை நூற்றுக்கனக்கான பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் மெய்சிலிர்க்கும் வண்ணம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.சீரிய முயற்சி செய்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், விழாவினை இனிதே முடித்து கொடுத்த அனைவருக்கும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் இரா.மரியசெல்வம் நன்றி கூறினார். இதில் கிருஷ்ணன் மூர்த்தி சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் கலந்து கொண்டார்.கல்வி குழு ஆலோசகர் செல்வம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















