நீ அழ – உன்னை பார்த்து நான் அழ – நம்மள பார்த்து எல்லோரும் அழ. உசிலம்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கவிதாவும் திமுக சார்பில் சந்திரகலாவும் போட்டியிட்டனர்.கவிதா செல்லம்பட்டி அதிமுக ஒன்றியச்செயலாளர் ராஜாவின் மனைவி ஆவார்.அதிமுகவிலிருந்து சிலரை திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு திமுகவுக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக வந்த தகவலால் காலை தேர்தல் ஆரம்பித்த காலை முதலே பரபரப்பு நிலவியது.மேலும் முடிவை அறிவிப்பதற்கு காலதாமதம் ஏற்ப்பட்டதால் அதிமுகவினர் நெஞ்சில் திகில் ஏற்ப்பட்டது.ஒருவழியாக 12.30 மணியளவில் அதிமுக கவுன்சிலர் கவிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அதிமுகவினர் நிம்மதியடைந்தனர்.

தேர்தல் நடைபெற்ற அரங்கத்திற்கு அனைவரையும் கும்பிட்டபடி வந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜா தன் மனைவி (ஒன்றியத்தலைவர்) கவிதாவைப் பார்த்தவுடன் ஆனந்தத்தால் அழ ஆரம்பிக்க அவரைப் பார்த்த மனைவி கவிதாவும் அழ ஆரம்பிக்க இருவரையும் பார்த்த அங்கிருந்த பெண் கவுன்சிலர்களும் அழ ஆரம்பிக்க சிறிது நேரம் தேர்தல் அரங்கம் அழுகை அரங்கமாக மாறியது.இச்சம்பவம் அங்கு வந்திருந்த அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!